வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையத்தை பதிவு செய்வதற்காக அறவிடப்படும் பாதுகாப்பு வைப்பு தொகையை 20 லட்சமாக அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த தீர்மானத்தை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மேற்கொண்டுள்ளது.
பாதுகாப்பு தொகையாக இதுவரை 7 லட்சத்து 50 ஆயிரம் ரூபாவே அறவிடப்பட்டு வருகிறது.
வெளிநாடு செல்லும் பணியாளர்களின் நலன் கருதியே இந்த நடவடிக்கை எடுக்கவுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.