பிரான்ஸ் தலைநகரை உலுக்கிய துப்பாக்கிசூடுகள் மற்றும் தற்கொலை தாக்குதல்கள் இடம்பெற்ற வேளை அப்பகுதியில் இருந்த பிரிட்டனை சேர்ந்த உளவியல் மருத்துவர் மர்ர்க்கொல்கிளெவ் தான் நேரில் பார்த்தவற்றை கார்டியனில் பகிர்ந்து கொண்டுள்ளார். தமிழில் – குளோபல் தமிழ்செய்திகள்:
நாங்கள் அந்த உணவகத்திலிருந்து 20 மீற்றர் தொலைவில் நின்றிருந்த வேளை முதலாவது பட்டாசுசத்தத்தை கேட்டோம்,நாங்கள் திரும்பிப்பார்த்த வேளை 185சென்டிமீற்றர் உயரமுள்ள நபர் ஓருவரை கண்டேன், அவர் நின்றிருந்த விதம், அவர் துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டுள்ளார் என்பதை எனக்கு உணர்த்தியது.
அவர் துப்பாக்கிபிரயோகம் செய்பவர் காணப்படுவது போன்று காணப்பட்டார், வலது காலை முன்நோக்கி நகர்த்தி அவரது இடது காலில் பின்நோக்கி நின்று கொண்டிருந்தார், அவரது இடது தோளில் துப்பாக்கி காணப்பட்டது, என்னால் மகஜின்களையும் பார்க்கமுடிந்தது.
அவர் அணிந்திருந்த அனைத்தும இறுக்கமானவைகளாகவும், கறுப்பு நிறத்திலும் காணப்பட்டன.
– RTX1HWYV
மோதலில் ஈடுபட்டுள்ள படைவீரர் ஓருவர் எவ்வாறு தோற்றமளிப்பார் என நீங்கள் சிந்தித்தால் அதற்கு பொருந்தக்கூடிய விதத்தில் இவர் காணப்பட்டார்,அவர் தனது இடது கையால் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்ட வண்ணமிருந்தார்,அவை தெளிவான நோக்கத்துடன் மேற்கொள்ளப்படும் தொழிற்சார் தன்மைகொண்ட துப்பாக்கி பிரயோகங்களாக காணப்பட்டன.
எனக்கு முன்னாள் உள்ள உணவுவிடுதியில் கதிரையில் அமர்ந்திருந்த மூன்று அல்லது நான்கு நபர்களை அவர் தனது துப்பாக்கி பிரயோகத்தின் மூலம் கொன்றார்,அவர்கள் துப்பாக்கி சூட்டிற்கு இலக்காவதையும் நிலத்தில் வீழ்ந்து பலியாவதையும் நான் கண்ணால் கண்டேன்.
எங்களால் 15 முதல் 20 வரையிலான துப்பாக்கிவேட்டுகளை கேட்கமுடிந்தது அதன் பின்னர் அனைத்தும் தீடீர் என மௌனமாகியது.
துப்பாக்கி பிரயோகம் நின்றவுடன் நாங்கள் உள்ளே சென்றோம்,உணவுவிடுதியின் முன்பகுதியில் வைத்து சுடப்பட்டமூவரும் அங்கேயே வீழ்ந்து கிடந்தனர்,பின்னர் நாங்கள் தாக்குதலிற்கு இலக்கான வெள்ளை காரைநோக்கி சென்றோம்,பொதுமக்கள் அந்த காரின் சாரதியை காப்பாற்றி வெளியில் தூண் ஒன்றில் அமர்த்தியிருந்தனர் அவர் மரணித்துக்கொண்டிருந்தார்.
நாங்கள் அந்த இடத்திலிருந்து புறப்படுவதற்கு தயாரான வேளை பொலிஸ்கார்கள் மற்றும் அம்புலன்ஸ்கள் வருவதை பார்த்தோம்,தப்பிவீடு சென்றுவிடுவோம் என மனது சொன்னாலும்,சமூக அக்கறை காரணமாக பொலிஸாருடன் மீண்டும் சம்பவ இடத்திற்கு செல்ல தீர்மானித்தோம்,
பொலிஸார் எங்களை துப்பாக்கிபிரயோகம் இடம்பெற்ற உணவுவிடுதிக்கு அழைத்துச்சென்றனர்,அது மிகவும் பயங்கரமானதாக காணப்பட்டது,நாங்கள் அங்கு 10 முதல் 15 பேரை பார்த்தோம் அவர்கள் ஓன்றில் மரணித்திருக்கவேண்டும் அல்லது படுகாயம் அடைந்திருக்கவேண்டும்.
நாங்கள் எவராவது வாகனத்தில் அல்லது மோட்டார்சைக்கிளில் தப்பிசெல்வதை பார்த்தோமா என பொலிஸார் விசாரித்தனர்,நாங்கள் குறிப்பிட்ட துப்பாக்கிதாரி தப்பிப்பதற்கு இலகுவான வீதியிலேயே உயிரை பாதுகாப்பதற்காக மறைத்திருந்தோம்,நாங்கள் சில கார்களிற்கு நடுவில் மறைந்திருந்தோம் ஆனால் எவரும் தப்பிசெல்வதை காணவில்லை.
பொலிஸார் எங்களிடமிருந்து சாட்சியங்களை பெறுவதற்காக பொலிஸ் நிலையத்திற்கு எங்களை அழைத்துசென்றனர்,நாங்கள் பார்த்த அந்த துப்பாக்கிதாரி கைதுசெய்யப்படவில்லை.
நாங்கள் பார்த்த இடங்களில் எல்லாம் துப்பாக்கிபிரயோகத்தை தற்கொலை தாக்குதல்களை நேரில் பார்த்த பலர் இருந்தனர்,
சிலர் உடல்களின் கீழே சிக்கிக்கொண்டவர்கள்,உடல்களை அகற்றிவிட்டு ஊர்ந்துவெளியேற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருந்தனர்,உடல்களிற்கு மேலேயே வீழ்ந்து கிடந்த சிலரும் உள்ளனர்.
அனைவருக்கும் அந்த நிமிடங்கள் மிகவும் பயங்கரமானவையாகவே காணப்பட்டன.
பிரான்ஸ் பரிஸ் நகர நாடக அரங்கில் இருந்த மக்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் அல்லாகு அக்பர் என முழுக்கமிட்டவாறு தாக்குதல் நடத்தினர் என அத்தாக்குதலிலிருந்து உயிர் தப்பியவர்கள் தெரிவித்துள்ளனர்.
அரங்கில் நிகழ்ச்சி நடைபெற்றுக்கொண்டிருந்த போது திடீரென நுழைந்தவர்கள் அல்லாகு அக்பர் என முழுக்கமிட்டவாறு துப்பாக்கியால் சுட ஆரம்பித்தனர். நான் தரையில் விழுந்து படுத்துவிட்டேன், பலர் துப்பாக்கி சூடு பட்;டு இறந்தனர். இறந்த சடலங்களுடன் அசையாது பலமணிநேரம் படுத்திருந்தேன் என உயிர்தப்பிய பெண் ஒருவர் தெரிவித்தார்.
சற்றுநேரத்தில் அங்கு பொலிஸார் வந்து பதில் தாக்குதல் நடத்தினர். இந்த திரையரங்கில் தாக்குதல் நடத்திய 8பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டதாகவும் பொலிஸார் 11பேர் கொல்லப்பட்டதாகவும் பிரான்ஸ் பொலிஸார் தெரிவித்தனர்.
இத்தாக்குதல்களை முஸ்லீம் பயங்கரவாதிகளே நடத்தியுள்ளார்கள் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பிரான்ஸ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.




