Post views-
பாரிஸ் தாக்குதல் பற்றி ஊடகங்களில் கண்ணீர் ஆஞ்சலி செலுத்தும் கருத்தாளிகளே கொஞ்சம் படியுங்கள் !
Published By: sifi | Date: 11/15/2015 05:05:00 PM
- அபூஷேக் முஹம்மத்
பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் போட்ட குண்டு வெடிப்பிற்கு வராத அழுகை
சிரியாவில் மில்லியன் கணக்கில் வெடித்து சிதறிய மக்களைப் பார்த்து வராத அழுகை
ராபியா தஹ்ரீரில் சிசியின் ராணுவப்படைகள் நடு ரோட்டில் நாய்களை வேட்டையாடுவதை போல சுட்டதை பார்த்து வராத அழுகை
ரோஹிங்க்யாவில் புத்த தீவிரவாதிகள் அன்றாடம் முஸ்லிம்களை கொலை செய்வதைப்பார்த்தும் , அகதிகளாக கடலில் தத்தளிப்பதை பார்த்தும் வராத அழுகை
ஏமன் நாட்டில் தற்போது வரை நடுவீதிகளில் குண்டு வெடித்துசாவும் அன்றாடங் காய்ச்சிகள் குறித்து வராத அழுகை
உலக சிறைச்சாலைகளிலும் உள்ளே கிடந்தது வெளிவராமல் இறந்த மக்கள் குறித்து வராத அழுகை
பிரான்ஸ் நாட்டை குறித்து உடனே கண்ணீர் வருகின்றது என்றால் இதற்க்கு பெயர் ஜன நாயகக் கண்ணீர் அஞ்சலி ..
.
ஏன் என்றால் நீங்கள் ஒன்றை குறித்து ஆராயாமல் கூப்பாடு போட்டு கண்ணீர்வடிப்பீர்கள். ஆனால் யாருக்காக அழுகின்றீர்களோ அவர்கள் உங்களுக்காக எப்பொழுதும் எதற்க்காகவும் அழ மாட்டார்கள் ...
தொடர்ந்து முஸ்லிம்களே கொல்லப்படுகிறார்கள் . தற்போது தான் ஐரோப்பியர்கள் கொல்லப்பட்டு உள்ளார்கள் அதனால் புதிய வரவிற்கு தரும் வரவேற்ப்பு அஞ்சலியா என புரியவில்லை ...
போலிகள் பேச இடம் தந்தால் கருத்து சொல்ல நாற்காலியில் அமராதீர்கள்.அந்த நாற்காலியில் நான்கு கால்களும் சியோனிசம் உருவாக்கிய கால்கள் .
1 மில்லியன் கணக்கில் ரத்த வெள்ளத்தில் சரிந்த உலக முஸ்லிம்களுக்கு மத்தியில் ஐரோப்பியர்கள் செத்த சதவிகிதம் தசம் எண் விகிதத்தில் கூட அடங்காது
பல லட்சம் குழந்தைகளின் சடலங்களுக்கு மத்தியில் பிரான்ஸ் நாட்டினரின் சடலங்களும் எங்களுக்கு வருத்ததை வரவைக்கத் தான் செய்கின்றது .ஒட்டு மொத்த தீமையின் ஆணிவேரையும் ஒரே வேகத்தில் பிடுங்கி எறிவதற்கு !
சீசன் கண்ணீரை விட முஸ்லிம்களின் செந்நீர் வீரியமானது அதனால் தான் நீதிக்காக உயிர் விடும் மக்களின் எண்ணிக்கை அதிகமானாலும் வருத்தம் கொள்வதில்லை . தலையில் ஓங்கி அடித்து நீங்கள் இன்று அழுவது போல சமூக ஊடகங்களில் ஒப்பாரி வைப்பது இல்லை ..
உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்