-Musthafa Ansar-
இஸ்ரேலிய தலைவர்கள் பாரிஸ் தாக்குதல்களை பாலஸ்தீன் போராட்டத்துடன் ஒப்பிடுகின்றார்கள்:
"நான் பல வருடங்களாக சொல்வது போல்; இஸ்லாமிய தீவிரவாதம் எமது சமுதாயங்களை தாக்குவது எமது விழுமியங்களையும், நாகரிகத்தையும் அழிப்பதற்காகவே, எனவே, இஸ்லாமிய தீவிரவாதத்துக்கெதிரான எமது பொதுவான யுத்தத்தில் பிரான்ஸ் உடன் நாம் தோளோடுதோள் நின்று ஒத்துழைப்போம்," பெஞ்சமின் நெதன்யாகு
"நாங்கள் (இஸ்ரேல்) நிறுவப்பட்ட காலத்தில் இருந்து இரத்தம் சிந்துகிறோம், (பிரான்ஸ் ஹமாஸை பயங்கரவாத பட்டியலில் இருந்து நீக்கி) ஒருவருடத்துக்கும் குறைவான காலத்தில் இப்படி ஒரு இரத்தம் சிந்தப்படும் என்று அறிந்திருக்கவில்லை, தீவிரவாதம் இஸ்ரேலுக்கு மாத்திரம் அச்சுறுத்தல் அல்ல முழு உலகுக்கும் அச்சுறுத்தல் என்பதை இன்று வெளிப்படையாக புரிந்துகொண்டது. இந்த தாக்குதலில் இறந்தவர்கள் வீணாக இறக்கவில்லை, உலகம் அடிப்படை (தீவிரவாத) இஸ்லாத்தோடு தனது போராட்டத்தைத் தொடரும் மத்திய கிழக்கில் இஸ்ரேல் பிரச்சினை அல்ல இஸ்ரேல் தான் தீர்வு. " இஸ்ரேலிய கலாச்சார அமைச்சர் Miri Regev
"இன்று நாங்கள் ஐரோப்பாவை பார்த்தோமென்றால், மத்திய கிழக்கு சிரியாவிழும் எமேனிலும், இராக்கிலும் பற்றி எரியும்போது, அவர்கள் எமது உற்பத்திப் பொருட்களை அடையாலமிடுகிரார்கள் (பகிஷ்கரிக்கிரரா்கள்). யதார்த்தத்தை புரிந்து அணுகக்கூடிய உறுதியான தலைமைத்துவம் ஐரோப்பாவில் இல்லாமையே பிரச்சினைக்குரிய விடயம்." Avigdor Lieberman, the leader of the far-right Yisrael Beytenu party
இந்தத் தாக்குதல்; நாம் எதற்காகப் போராடுகின்றோமோ, எதைப் போற்றுகின்றோமோ அந்த சுதந்திர விழுமியங்களுக்கும், ஜனநாயகத்துக்கும் எதிராக மேட்கோள்ளப்பட்ட தாக்குதல்"இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர், மோஷே யலோன்.
இவர்களின் கருத்துக்களில் இருந்து நீங்கள் என்ன புரிந்துகொள்கிறீர்கள்?
ஐரோப்பியர்கள் இஸ்ரேலிய பொருட்களைப் பகிஷ்கரிப்பதற்கான தண்டனை?
ஹமாஸை பயங்கரவாத பட்டியலில் இருந்து நீக்கியதற்கான தண்டனை?
இஸ்லாமிய தீவிரவாதத்துக்கெதிரான யுத்தத்தில் பிரான்ஸ் இன் பங்களிப்பை அதிகப்படுத்துவதற்கு விடுக்கப்பட்ட அழைப்பு?
இஸ்லாம் கொடூரமான மார்க்கம் என்ற கருத்தை மேலும் உறுதிப்படுத்தல்.
இஸ்ரேலிய நலன்களுக்கு எதிரானவர்களுக்கு இது தான் கதி என்ற கருத்தைப் புரியவைத்தல்.
இவற்றில் எதைச் சொல்ல வருகிறார்கள் இஸ்ரேலிய நரிகள்?




