இலங்கை மற்றும் சேர்பியா நாடுகளுக்கிடையே விமானசேவைகள் தொடர்பில் இரு நாடுகளுக்கிடையிலும் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்படவுள்ளது.
இது தொடர்பில் அதிகாரிகளின் கலந்துரையாடல் இடம்பெற்று அதிகாரரிகளின் மட்டத்தில் இருதரப்பு விமான சேவை ஒன்றினை ஆரம்பிப்பதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது. இதன் மூலம் நாட்டில் சுற்றுலாத்துறை முன்னேற்றமடையும் என்பதில் ஐயமில்லை.
இதனை அதிகாரம் பொருந்திய மட்டத்தில் கைச்சாத்திட்டு வலுப்படுத்தும் நோக்கிலும் அதனை தொடர்ந்து அதனை நடைமுறைப்படுத்தும் நோக்கிலும் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.