அரங்கம் நிருபர்: த.மயூரன் – கல்லடி
மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுமார் 400 முச்சக்கர வண்டிகளுக்கு விபத்துக்களைத் தவிர்க்கும் விழிப்புணர்வூட்டும் பிரசுரங்கள் ஒட்டப்பட்டன.
மாவட்ட அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்திற்கான ஐரோப்பிய ஒன்றிய உதவித்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் யுனிசெப் நிறுவனம் மற்றும் சர்வோதய நிறுவனம் இணைந்து நடாத்தும் சமூக மட்ட சிறுவர் விபத்துக்களை குறைக்கும் செயற்திட்ட நிகழ்வின் ஒரு கட்டமாக மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுமார் 400 முச்சக்கர வண்டிகளுக்கு விபத்துக்களைத் தவிர்க்கும் விழிப்புணர்வூட்டும் பிரசுரங்கள் ஒட்டப்பட்டன.
இந்நிகழ்வு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை முன்பாக 16.11.2015 இன்று காலை 10.30 மணியளவில் ஆரம்பிக்கப்பட்டது. இந்நிகழ்வில் யுனிசெப் நிறுவனத்தின் அதிகாரிகள், சர்வோதய நிறுவனத்தின் அதிகாரிகள் மற்றும் மட்டக்களப்பு மோட்டார் வாகன போக்குவரத்து பிரிவு பொலிஸ் பொலிஸ் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.



