போதைப் பொருள் விற்பனை மற்றும் அனுமதியை முற்றாக தடை செய்ய தான் தயாராக உள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.
இன்று காலை கேகாலை பகுதி பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அத்துடன் பாடசாலைகள், விஹாரைகள் போன்ற இடங்களுக்கு அருகில் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபடுவதைக் கட்டுப்படுத்த அரசாங்கம் அதிக அவதானம் செலுத்தி வருவதாகவும் ஜனாதிபதி இங்கு மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.