வாட மாகாண பாடசாலைகள் நாளை மூடப்படும் என மாகாண கல்வி செயலாளர் தெரிவித்துள்ளார்.
தொடரும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மாகாண கல்வி செயலாளர் மேலும் தெரிவித்தார்.
வட மாகாணத்தில் நிலவி வரும் கடும் மழை காரணமாக பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் பாடசாலைகளில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




