அபாயகர ஓளடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் தலைவர் நிலங்க சமரசிங்கவை பதவி நீக்கி விட்டு, அந்த இடத்துக்கு எம்.எம். சிறிசேன ஹேரத்தை நியமிக்க நடவடிக்கை எடுத்ததும், அதற்காக நியமனக் கடிதத்தை தயாரித்ததும் சட்டம், ஒழுங்கு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு முன்னாள் அமைச்சர் திலக் மாரபன என்பது தெரியவந்துள்ளது.
இந்த நியமனம் ஜனாதிபதியினால் முன்னெடுக்கப்பட்டது என ஏற்கனவே திலக் மாரபனவினால் அறிவிக்கப்பட்டிருந்தது.
போதைப் பொருள், எதனோல் வியாபாரத்தில் தொடர்புபட்ட அரசியல்வாதிகள் தொடர்பிலான தகவல்களை பிரதான அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கு கடந்த பொதுத் தேர்தலின் போது அபாயகர ஓளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் தலைவர் திலங்க சமரசிங்க அனுப்பியிருந்தும் இதுவரையில் அது தொடர்பில் எந்தவொரு நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டிருக்க வில்லையென குறிப்பிடப்படுகின்றது.
அந்த பட்டியலில் பாராளுமன்ற உறுப்பினர்கள் 25 பேரின் தகவல்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.