நிதி மோசடி தொடர்பாக ஆறு அரச நிறுவனங்களைச் சேர்ந்த 13 உயர் அதிகாரிகளை உடனடியாக அமுலாகும் வகையில் பதவி நீக்கம் செய்யுமாறு பாரிய நிதி மோசடி மற்றும் ஊழல்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு உத்தரவிட்;டுள்ளது.
ஆணைக்குழுவின் செயலாளர் லெஸில் டி சில்வா இதனை எமது செய்திச் சேவைக்கு தெரிவித்தார்.
தமது விசாரணைகளுக்கு தேவையான தகவல்களை பெற்றுக் கொள்வதற்கு இடையூறாக இருந்தார்கள் என்ற காரணத்தினாலேயே அந்த அதிகாரிகள் நீக்குமாறு உத்தரவிடப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
நீதி அமைச்சு, தெங்கு ஆராய்ச்சி நிறுவனம், இலங்கை மீன்பிடி மற்றும் துறைமுக அதிகாரசபை, பொது நிர்வாக அமைச்சு, கூட்டுறவு மொத்த விற்பனை கூட்டுத்தாபனம், சுயாதீன தொலைக்காட்சி போன்ற அரச நிறுவனங்களின் 13 உயர் அதிகாரிகளையே பதவி விலக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.