பொலன்னறுவை, கதுருவெல நகரிலுள்ள வியாபார நிலையமொன்றில் நேற்று பிற்பகல் 1.00 மணியளவில் ஏற்பட்ட தீயில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மின்சார ஒழுக்கு காரணமாக இந்த தீ ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மின்சார தொடர்பொன்றை மேற்கொண்டிருக்கும் போதே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கதுருவெல முஸ்லிம் கொலனியில் வசிக்கும் 42 வயதுடைய ஒருவரே தீயில் சிக்கி மரணமடைந்துள்ளார். இந்த தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர சுமார் ஒரு மணி நேரம் எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தமன்கடுவ பிரதேச சபை தீயணைப்புப் பிரிவு, பொலன்னறுவைப் பொலிஸார் மற்றும் கதுருவெல பிரதேச வாசிகள் ஆகியோர் இணைந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். பொலன்னறுவைப் பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.






