Post views-

ரணிலை வீழ்த்த சந்திரிக்கா முயற்சியா? மகிந்தவின் பட்டியலில் ரணிலும் பதவி இழப்பாரா?

வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவை பிரதமராக்கும் திட்டத்துடன் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க காய் நகர்த்தி வருவதாக தெரிய வந்துள்ளது.
தற்போதைய நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் 20 க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் இத்திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, மங்களவுடன் இணைந்து செயற்பட சம்மதம் தெரிவித்துள்ளனர்.
இத்திட்டத்தின் பிரகாரம் ஐக்கிய தேசியக் கட்சியின் கணிசமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்றை கட்சியிலிருந்து உடைத்தெடுத்து, சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் மங்கள சமரவீர பிரதமர் பதவிக்கு நியமிக்கப்படவுள்ளார்.
கடந்த மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவை துரத்தித் துரத்தி சேறு பூசிய காலத்தில் அவருக்காக தன் அமைச்சுப் பதவியையே துறந்து எதிரணிக்குச் சென்றவர் மங்கள சமரவீர.
இதற்கான பதில் நன்றியாக தனது வாழ்நாளுக்குள் மங்களவை பிரதமர் பதவியில் உட்கார வைத்து அழகு பார்க்க சந்திரிக்கா அம்மையார் கடுமையான ஆர்வம் கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்படி எதிர்வரும் சில மாதங்களுக்குள்ளாக ஐக்கிய தேசியக்கட்சி தலைமைத்துவம் மற்றும் பிரதமர் பதவி என்பன ரணில் விக்கிரமசிங்கவிடமிருந்து பறிபோகலாம் என்றும் நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை வீழ்த்துவதற்கு நடத்தப்பட் இரகசிய நடவடிக்கைகள் போன்று ரணிலை வீழ்த்துவதற்கும் சூழ்ச்சிகள் இடம்பெறுகின்றதா என கொழும்பு அரசியலில் பேசப்படுகின்றது.
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..



    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்



    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    தற்போதைய பார்வைகள்

    Our twitter service

    online now


    உங்களுக்கும் இணையதளம்