பாரிஸில் நேற்று முந்தினம் வெள்ளிக்கிழமை (13) நடைபெற்ற தொடர் தாக்குதல்களில் உயிரிழந்தவர்களின் நினைவாக மூன்று நாள் தேசியத் துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தீவிரவாதத்துக்கு எதிராக போராடி வருவதற்காக தமது நகரம் மிக மோசமான விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது என பாரிஸின் மேயர் அனா ஹிடால்கோ தெரிவித்துள்ளார். இளைஞர்கள் வார இறுதியில் செல்லும் பகுதியை குறிவைத்து இத்தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன எனவும் பாரிஸ் மேயர் கூறுகிறார்.
அங்கு நடைபெற்றுள்ள தாக்குதல்களை அடுத்து பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் ஆகியவை மூடப்பட்டுள்ளன. மக்கள் வந்துசெல்லும் பொது இடங்களும் மூடப்பட்டுள்ளன. எதிர்வரும் வியாழக்கிழமை (19) வரை அனைத்து பொதுக்கூட்டங்களுக்கும், மக்கள் ஒன்று கூடுவதற்கும் காவல்துறையினர் தடை விதித்துள்ளனர்.
நகரிலுள்ள மக்கள் ரத்த தானம் செய்யுமாறு பாரிஸ் மாநகர கவுன்சில் வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்தக் கொடூரமானத் தாக்குதலகளில் உயிரிழந்தவர்களின் உற்றார் உறவினர்களுக்கு பாரிஸ் நகரவாசிகள் பல்வழிகளில் தமது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.