இம்மாதம் 11ஆம் திகதி பிரான்ஸ் தலைநகர் பாரிஸில்  நடைபெற்ற 38ஆவது பொதுக்கூட்டத்தில் இலங்கை நிறைவேற்றுச்சபைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளது.
ஆசிய பசுபிக் வலய நாடுகளிலிருந்து யுனெஸ்கோ நிறைவேற்றுச் சபைக்கு தெரிவு செய்யப்பட்ட  6 நாடுகளில் ஒன்றாக இலங்கை காணப்படுகிறது. எதிர்வரும் 2019ஆம் ஆண்டு வரை இலங்கை நிறைவேற்றுச் சபையில் அங்கம் வகிக்கும்.
186 வாக்குகளில் 149 வாக்குகள் இலங்கைக்கு ஆதரவாக வாக்களிப்பட்டிருந்தன. இதற்காக 8 நாடுகள் போட்டியிட்டிருந்தன.
இலங்கை, மலேசியா, வியட்நாம், கொரியா, பாகிஸ்தான் மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் நிறைவேற்றுக்குழுவுக்கு தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

 




 
