Post views-

மஹிந்தாவின் பிரசாரக் கூட்டத்தில் பச்சிளம் குழந்தை நசியுண்டு பரிதாபகரமாகப் பலி


யாழ். துரையப்பா விளையாட்டு அரங்கில் நேற்று இடம்பெற்ற மஹிந்தாவின் அரசியல் பிரசாரக் கூட்டத்திற்கு வலுக்கட்டாயமாக இழுத்துச் செல்லப்பட்டவர்கள் கூட்டிச்சென்ற பச்சிளம் குழந்தை, உணவு வழங்கப்பட்ட இடத்தில் சனநெரிசலில் சிக்குண்டு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

நேற்றைய இக்கூட்டத்திற்கு சமுர்த்தி நிவாரணம் பெறுக்கின்ற பயனாளிகளை சமுர்த்தி முகாமையாளர்கள் கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்றுள்ளனர். இந்த மக்களுக்கு நீண்டநேரமாக உணவு வழங்கப்படவில்லை.
இதனால் குழந்தைகளுடன் சென்ற தாய்மார் உணவைத் தேடி அலைந்துள்ளனர். இதன்பொழுது குறிப்பிட்ட ஒரு இடத்தில் உணவு வழங்கப்படுவதைக் கண்ட மக்கள் அவ்விடத்தில் ஒன்று கூடியமையால் அந்த இடத்தில் சனநெரிசல் ஏற்பட்டுள்ளது.

இச்சன நெரிசலுக்குள் குழந்தைக்கு சோடவும், உணவும் வேண்டுவதற்காக சென்ற தாய் தனது கைக்குழந்தையை கைதவற விட்டமையினால் அந்த இடத்திலேயே குறித்த பச்சிளம் குழந்தை நசியுண்டு பரிதாபகரமாக உயிரிழந்த துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இக்குழந்தையின் சடலம் தொடர்பான தகவலை வெளியிடக்கூடாது என யாழ்.போதனா வைத்தியசலை நிர்வாகத்திற்கு ஆட்சியாளர்கள் கடுமையாக உத்தரவிட்டுள்ளதால் குழந்தையின் பெயர் முகவரி தெடர்பில் இன்னமும் தகவல்கள் வெளியாகவில்லை என்பது குறிபபிடத்தக்கது.(ரி)
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..



    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்



    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    தற்போதைய பார்வைகள்

    Our twitter service

    online now


    உங்களுக்கும் இணையதளம்