யாழ்ப்பாணம், நாவாந்துறை பகுதியில் தற்போது பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
அண்மையில் இரு விளையாட்டு கழகங்களைச் சேர்ந்த கழக உறுப்பினர்களுக்கிடையில் இடம்பெற்ற வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதனைத் தொடர்ந்து அப்பகுதியில் பதற்றமான சூழ் நிலை ஏற்பட்டிருந்ததுடன், குறித்த நிலைமை பொலிஸாரின் உதவியுடன் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருந்தது.
இந்த நிலையில் மீண்டும் நேற்று வெள்ளிக்கிழமை மாலை இரு விளையாட்டு கழகங்களைச் சேர்ந்த கழக உறுப்பினர்களுக்கிடையில் மோதல் இடம்பெற்றுள்ளதாகவும் இதனைத் தொடர்ந்து குறித்த பகுதியில் பதற்றமான சூழ் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
இதன் போது கலவரத்தினையடக்க முற்பட்ட இராணுவத்தினர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதில் இளைஞர் ஒருவருக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
காயமடைந்த இளைஞன் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இதேவேளை குறித்த துப்பாக்கிச் சுடு குறித்து யாழ்ப்பாண மக்கள் மத்தியில் பதட்டம் நிலவுவதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.(ரி)




