தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான த.கலையரசன் மற்றும் மு.இராஜேஸ்வரன் ஆகியோரின் பொலிஸ் பாதுகாப்பை அரசாங்கம் மீளப்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மைத்திரிபாலவுக்கு நிபந்தனையற்ற ஆதரவை தெரிவித்துள்ள நிலையில், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களின் பாதுகாப்பு மீளப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.




