ஜனாதிபதி தேர்தல் உள்நாட்டு விவகாரமாகும். இதில் ஐரோப்பிய யூனியன் தலையிட வேண்டிய அவசியமோ அது குறித்து கருத்து வெளியிடும் அவசியமோ இல்லையென கடுந்தொனியில் கருத்து வெளியிட்டுள்ளது வெளியுறவுத்துறை அமைச்சு.
இலங்கையில் நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தல் இடம்பெற அரசாங்கம் வழி வகை செய்ய வேண்டும் என ஐரோப்பிய யூனியனால் விடுக்கப்பட்டிருந்த கோரிக்கை தொடர்பில் பதிலளிக்குமுகமாகவே வெளியுறவுத்துறை அமைச்சு இவ்வாறு அறிக்கை மூலம் தெரிவித்துள்ள அதேவேளை வெளிநாட்டு ராஜதந்திரிகளுடனான சந்திப்பின் போது அரசாங்கம் இராணுவத்தைக் கொண்டு தமிழ் மக்கள் வாக்களிப்புக்கு இடையூறு விளைவிக்கும் என தாம் அச்சப்படுவதாக பொது வேட்பாளர்கள் அன்றைய தினம் வெளிநாட்டு ராஜதந்திரிகள் மத்தியில் வைத்து தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.(சி)




