Post views-

எபோலாவின் மூலம் பலியானோர் எண்ணிக்கை 7,890ஆக உயர்வு


மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் பரவியுள்ள எபோலா நோய் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7,890ஆக உயர்ந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.
மேற்கு ஆபிரிக்க நாடுகளான சியரா லியோன், லைபீரியா, கினீ ஆகிய மூன்று நாடுகளிலேயே அதிக அளவில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப் படுகிறது.
இதில், சியரா லியோனில் 9,446 பேருக்கு எபோலா பாதிப்பு ஏற்பட்டுள்ளதோடு, அவர்களில் 2,758 பேர் உயிரிழந்துள்ளனர். லைபீரியாவில் 8,018 பேருக்கு எபோலா பாதிப்பு ஏற்பட்டுள்ளதோடு, அவர்களில் 3,423 பேர் உயிரிழந்துள்ளனர்.
கினீ நாட்டில் 2,707 பேருக்கு எபோலா பாதிப்பு ஏற்பட்டுள்ளதோடு, அவர்களில் 1,708 பேர் உயிரிழந்துள்ளனர்.
எபோலா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து வந்த மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களையும் இந்நோய் தாக்கியுள்ளது.
சிகிச்சையில் ஈடுபட்ட 678 சுகாதாரத் துறை ஊழியர் மற்றும் மருத்துவர்களுக்கு நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளது. அவர்களில் 382 பேர் உயிரிழந்துள்ளனர் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதே வேலை பிரிட்டனில் முதல் முறையாக ஒரு நபர் எபோலா நோயால் பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..



    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்



    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    தற்போதைய பார்வைகள்

    Our twitter service

    online now


    உங்களுக்கும் இணையதளம்