அண்மையில் பொது வேட்பாளர் மைத்ரிபால சிறிசேனவை ஆதரித்து எதிரணியில் இணைந்து கொண்ட வடமேல் மாகாணசபை உறுப்பினர் லக்ஷ்மக் வந்தருவகேயின் வீட்டை நோக்கி மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தினால் அவரது வீட்டுக் காவலாளியொருவர் காயமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்றைய தினம் பொது வேட்பாளர் கலந்துகொண்ட கூட்டத்தின் மீது கல்வீச்சும் அதேபோன்று கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக்கின் வீடு உட்பட மேலும் சிலிரின் வீடுகளுக்கு பெற்றோல் குண்டுகளும் வீசப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.(சி)




