முன்னாள் பிரதியமைச்சராகவும் தற்போது ஜனாதிபதி ஆலோசகராகவும் கடமையாற்றிய வீ. புத்திரசிகாமணி நேற்றைய தினம் பொது வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து எதிரணியில் இணைந்துகொண்டுள்ளார்.
எதிரணியில் இணைந்துகொள்வதற்காக தமது பதவியை இராஜினாமா செய்திருப்பதாகவும் அவரது தேர்தல் வெற்றிக்கு தன்னால் முடிந்த பங்களிப்பை வழங்கவிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கடந்த தேர்தலில் தோல்வியுற்ற நிலையில் ஜனாதிபதி ஆலோசகராக அவர் நியமிக்கப்பட்டமையும் தற்போது அ.இ.ம.க வுக்கு விட்டுக்கொடுப்பதற்காக தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்துள்ள முன்னாள் பா.உ ஏ.எச்.எம் அஸ்வர் ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.(சி)



