Post views-

கை தட்டாததால் காங்கேசன்துறைக்கு போகவில்லை மஹிந்த


காங்கேசன்துறையிலிருந்து உத்தியோகபூர்வமாக யாழ்ப்பாணம் ஊடாக கொழும்புக்கு செல்லும் யாழ்தேவி ரயில் சேவையை ஆரம்பித்து வைக்கும் இன்றைய நிகழ்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்துகொள்ளவில்லை.
இன்று நடந்த கூட்டதின் போது அங்கிருந்த அறிவிப்பாளர் 100 தடவைகளுக்கு மேல் ஜனாதிபதி வரும்போது கைகளை தட்டி அவரை ஆரவாரம் செய்யும் படி கூறியும் எவரும் மனமுகந்து கை தட்டாததால் மனமுடைந்த மஹிந்த மைதானதில் இருந்தே புறப்பட்டு சென்று விட்டார்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் செயலாளரும் அமைச்சருமான சுசில் பிரேமஜெயந்த, போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம ஆகியோர் இந்த ரயில் சேவையை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து, காங்கேசன்துறையிலிருந்து யாழ்ப்பாணம் வரை பயணித்தனர்.
காங்கேசன்துறை - யாழ் ரயில் சேவை உத்தியோகபூர்வமாக ஆரம்பம்
காங்கேசன்துறையிலிருந்து யாழ்ப்பாணத்துக்கான ரயில் சேவை இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
காங்கேசன்துறை ரயில் நிலையத்திலிருந்து அமைச்சர்களான சுசில் பிரேம ஜயந்த, குமார வெல்கம, டக்ளஸ் தேவானந்தா, ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி ஆகியோர் இந்த ரயில் சேவையை ஆரம்பித்து வைத்தனர்.
அத்துடன் அவர்கள் அதே ரயிலில் பயணம் செய்து யாழ். ரயில் நிலையத்தை வந்தடைந்தனர்.
ஒவ்வொரு ரயில் நிலையங்களிலும் பெருளமளவான பொதுமக்கள் நின்று இந்த ரயில் சேவையைப் பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, இந்த ரயில் சேவையினை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆரம்பித்து வைக்கவிருந்ததாகவும், இறுதி நேரத்தில் நிகழ்ச்சி நிரல் மாற்றியமைக்கப்பட்டதாகவும்  தகவல்கள் வெளியாகியிருந்தன.(த)

  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..



    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்



    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    தற்போதைய பார்வைகள்

    Our twitter service

    online now


    உங்களுக்கும் இணையதளம்