பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவை சுற்றிவளைத்து பொலிஸார் திடீர் தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.
கங்கொடவில நீதிமன்ற நீதவான் நுவான் மெப் பண்டாரவினால் விடுக்கப்பட்ட சுற்றிவளைப்பு தேடுதல் அனுமதியுடனேயே இந்த தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
‘குடும்பக் காட்டு’ எனும் தலைப்பில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு சேறுபூசும் வகையில் அச்சிடப்பட்டதாக கூறப்படும் புத்தகங்கள் அங்கு மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக வெளியான தகவல்களை அடுத்தே சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.(ம)