பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் பிரசாரக்கூட்டம் மீது நடத்தப்பட்ட கல்லெறித் தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளனர்
இரத்தினபுரி, பெல்மதுல்ல என்ற இடத்திலேயே இந்த தாக்குதல் சம்பவம் இன்று இரவு இடம்பெற்றுள்ளது.
பொதுவேட்பாளர் கூட்டத்தில் பங்கேற்கும் முன்னர் கூட்டத்தின் மீது கல்லெறித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து இரண்டு தரப்பினருக்கும் இடையில் மோதல்கள் இடம்பெற்றதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன உட்பட பலர் இந்த பிரச்சார கூட்டத்தில் பங்கேற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள
அதேவேளை, மைத்திரிபால சிறிசேன அவர்கள் பாதுகாப்பாக இவ்விடத்தில் இருந்து சென்று விட்டதாகவும் சற்று முந்திய செய்திகள் தெரிவிகின்றன.
நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பொது வேட்பாளர் மைத்ரிபால சிறிசேன அவர்கள் உரையாற்றத் தொடங்கியபோது மேடை மீதும் கூட்டத்தில் இருந்தவர்கள் மீதும் கற்கள் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியதுடன், பலர் காயமும் அடைந்தனர்.




