நேற்றிரவிலிருந்து காத்தான்குடியில் ஆளும் தரப்பினரால் மிக மோசமாக கட்டவிழ்த்துப்பட்டுவரும் அரசியல் அநாகரீக செயற்பாடுகளின் உச்சகட்டம் இன்று அதிகாலையிலிருந்து இடம்பெற்று வருகின்றன. நேற்றைய தினம் மைத்திரிபால சிறிசேனாவை ஆதரித்து காத்தான்குடியில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தின் ஏற்பாட்டாளார்கள் மற்றும் அக்கூட்டத்தில் பங்குபற்றியவர்கள் என்பவர்களது வீடுகள் மீது இன்று அதிகாலையிலிருந்து கைக்குண்டுகள் வீசப்பட்டு வருகின்றன.
இதன் காரணமாக வீட்டின் பகுதிகள் சேதமடைந்திருக்கின்றன. குழந்தைகளும் சிறுவர்களும் அச்சத்தால் அழும் சத்தங்கள் கேட்பதுடன், தொடர்ந்தும் காத்தான்குடி பதட்டத்தில் காணப்படுகிறது.




