பொதுவேட்பாளர் மைதிரிபலா சிறிசேனவின் வெற்றியை பலப்படுத்தும் முகமாக "பிரேமதாசாவின் நிழலில் மைத்திரியின் ஆட்ச்சி" எனும் தொனிப் பொருளில் பிரேதாசாவின் அரசியல் வாரிஸ்சான சஜித் பிரேமதாசாவின் வழிகாட்டலில் மேல் மாகான சபை உறுப்பினர்களும் மத்திய கொழும்பு இரட்டை அமைப்பாளர்களான பைரூஸ் ஹாஜி, முஜிபுர் ரஹ்மான் தலைமையில் இன்று சனிக்கிழமை மாலை (03.01.2015) மத்திய கொழும்பு குணசிங்கபுறவில் மாபெரும் பொதுக்கூட்டம் இடம் பெறவுள்ளது.
இகூட்டத்துக்காக கொழும்பில் உள்ள அனைத்து மக்களுடன் சேர்த்து வெளி மாவட்டங்களில் இருந்து மத்திய கொழும்பில் தங்கியிருக்கும் தமிழ் பேசும் அனைத்து சகோதரர்களையும் அன்போடு அழைக்கின்றார்கள் பைரூஸ் ஹாஜியும், முஜிபுர் ரஹ்மானும். மேலும் இக்கூட்டத்துக்கு பாரளமன்ற உறுப்பினர்களான சஜித் பிரேமதாச, சுஜீவ சேனசிங்க, ராஜித சேனாரத்ன, ரவி கருணாநாயக்க, சம்பிக ரனவக்க, எரான் விகரமரத்ன, பைசர் முஸ்தபா, மனோ கனேசன்,விக்ரமபாகு கருனாரத்ன, சுசில் கிந்தேல்பிட்டிய, பிரசன்ன சோலாலங்காராச்சி,அனோமா பொன்சேகா,றோசி சேனாநாயக்க, ஹிருனிக்கா பிரேமசந்ர, ஆகியோர் சிறப்பு பேச்சாளர்களாக கலந்து சிறப்பிக்கவுள்ளார்கள்.




