Post views-
கிழக்கு மாகாணத்துக்கான சட்டவிரோத போஸ்டர்களை ஐ.தே.க வின் கை வசம்
Published By: sifi | Date: 1/02/2015 10:52:00 AM
கிழக்கு மாகாணத்தில் தமிழ் – முஸ்லீம் மக்களுக்கு இடையில் குழப்பங்களை தூண்டும் விதமாக சட்ட விரோதமாக அச்சடித்து கிழக்கு மாகாணத்துக்கு அனுப்பபடவிருந்த பல்லாயிரக்கணக்கான போஸ்டர்களை, ஐ.தே.க அணியினர் கைப்பற்றி நாரஹேன்பிட்ட பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்த சம்பவம் ஒன்று நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.
இவர்களுக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து துரிதமாக செயற்பட்டு போஸ்டர்களை கைப்பற்றி நாரஹேன்பிட்ட பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்திருக்கிறார்கள்..
அந்த பிரசுரங்களையே இங்கு காண்கிறீர்கள்..
இதற்கு உடந்தையாக இருந்தவர்கள் அரச வங்கியொன்றின் பிரமுகர் ஒருவரும் அரச தொலைக்காட்சி ஒன்றின் பிரமுகர் ஒருவரும் என அடையாளப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.(ம)
உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்