பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரப் பணிகள் நேற்று மட்டக்களப்பில் ஆரம்பித்து வைக்கப்பட்டன.
இதில் பாராளுமன்ற உறுப்பினரான பா.அரியநேத்திரன், மாகாண சபை உறுப்பினர்களான கே.துரைராஜசிங்கம், கோ.கருணாகரம், பிரசன்னா, வெள்ளிமலை, நடராசா மற்றும் தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்கள் ஆதரவாளர்களும் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
மட்டக்களப்பிலுள்ள தமிழரசுக்கட்சியின் அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட இக்குழுவினர் நகரின் பல்வேறு பகுதிகளிலும் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தனர்.(டி)






