விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு அடுத்தபடியாக அவ்வமைப்பின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள கே.பி தற்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்காக கிளிநொச்சியில் பிரச்சாரம் செய்து வருவதாக தெரிவித்துள்ளார் ஜாதிக ஹெல உறுமயவின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சம்பிக்க ரணவக்க.
இலங்கை சட்டதிட்டத்திற்கமைய விசாரணைகள் மேற்கொள்ளப்படாமல் ஒரு குற்றவாளிக்கு ஜனாதிபதியினால் மன்னிப்பு வழங்கப்பட முடியாது. இந்நிலையில் கே.பி எதுவித கேள்வி கணக்குமின்றி சுதந்திரமாக நடமாடித் திரிவது எப்படியெனவும் கேள்வியெழுப்பிய அவர் உத்தியோகபூர்வ ரீதியாக நியமிக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் தலைவர் கே.பி ஜனாதிபதியின் பக்கம் இருக்க, அவரோ பொது வேட்பாளர் வெற்றிபெற்றால் புலி இயக்கம மீண்டும் உயிர்பெறும் என வேடிக்கையான கருத்துக்களை கூற வருகிறார் என நேற்றைய தினம் எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் வைத்து தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.(சி)




