அமைச்சர் அதாவுல்லாவின் கட்சியான தேசிய காங்கிரஸ் உறுப்பிணரும் கிழக்குமாகாணசபை உறுப்பிணர் சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன் இன்று ஜனாதிபதி எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனாவினை இன்று பி.பகல் பொலநருவையில் நடைபெற்ற கூட்டத்தின் மேடையில் ஏறி மைத்திரிபால சிறிசோனவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பிணர் காலம் சென்ற அடவட்கேட சம்சுதீன் அவர்களின் புதல்வர் சட்டத்தரணி ஆரிப் கல்முனையை பிறப்பிடமாகக் கொண்டவர். கடந்த கிழக்கு மாகாணசபையில் தேர்தலின் அமைச்சர் அதவுல்லாவின் வெற்றிலைச் சிண்னத்தில் போட்டியிட்டு 3 உறுப்பிணர்கள் தெரிவாணார்கள். அதில் ஆரிப் சம்சுதீன் கல்முனைத் தொகுதியை பிரகடணப்படுத்தினார்.
ஆரிப் சம்சுதீன் தகவல் தருகையில் -கடந்த வாரங்களாக மணச்சாட்சிப்படியும் கிழக்கு வாழ் மட்டும்மல்ல முழு இலங்கை வாழ் முஸ்லீம் சமுகமும் ஜனாதிபதி மஹிந்தவுக்கு ஆதரவு தெரிவிப்பதை தவிர்த்து பொதுஎதிரணியில் ஒன்று சேர்ந்துள்ளனர்.
ஆகவே வட கிழக்கில் 90 வீதமான தமிழ் முஸ்லீம்கள் ஒரணியில் திரண்டு இருக்கும்போது நாம் மட்டும் எதிர்த்து ஜனாதிபதிக்கு ஆதரவு அளிப்பது மணச்சாட்சிக்கு விரோதமாகும் என அவர் அவரது ஆதரவாளர்களை கல்முனை, நிந்தவூர் பிரதேசங்களின் கலந்து ஆலோசித்து மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்துள்ளார். தமது பிரதேசத்தில் மைத்திரிபாலவின் வெற்றிக்கே உழைப்பதாக அறிவித்துள்ளார்.
கடந்த 10 வருடகாலமாக அமைச்சர் அதாவுல்லாவுக்கு கிழக்கில் 3 மாகணசபை உறுப்பிணர்கள் தொடர்ந்து இருந்து வந்தனர். அதில் ஒருவர் எதிரணிக்கு ஆதரவளித்துள்ளார்.(ம)