எதிர்வரும் 8 ஆம் திகதி நடைபெறவுள்ள ஏழாவது ஜனாதிபதித் தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தேர்தலின் இறுதி முடிவுகள் ஒன்பதாம் திகதி வெள்ளிக்கிழமை மாலை அறிவிக்கப்படும் எனவும் தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.
நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளை சேர்ந்த 17 வேட்பாளர்களும் இரு சுயேச்சை வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். சட்ட விரோத தேர்தல் பிரசார நடவடிக்கைகள் மற்றும் தேர்தல் வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளமையினால் தேர்தல் தினத்தன்று அந்த நிலைமை மேலும் மோசமடையலாம் என தேர்தல்கள் கண்காணிப்பு அமைப்புக்கள் தெரிவிக்கின்றன.
தேர்தலின் தபால் மூல தேர்தல் முடிவுகள் தேர்தல் தினத்தன்று இரவு 10 மணியளவில் அறிவிக்கப்படலாம் எனவும் தேர்தல்கள் செயலகம் குறிப்பிட்டுள்ளது.(டி)
 

 



 
