எதிர்வரும் வியாழக்கிழமை நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஒரு கோடியே 50 இலட்சத்து நாற்பத்து நான்காயிரத்து நானூற்றி தொண்ணூறு பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். அதேவேளை நாடளாவிய ரீதியில் 12, 314வாக்களிப்பு நிலையங்களும், 1,419 வாக்கெண்ணும் நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல்கள் செயலகம் மேலும் தெரிவித்துள்ளது.
சட்ட விரோத தேர்தல் பிரசார நடவடிக்கைகள் மற்றும் தேர்தல் வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளமையினால் தேர்தல் தினத்தன்று அந்த நிலைமை மேலும் மோசமடையலாம் என தேர்தல்கள் கண்காணிப்பு அமைப்புக்கள் தெரிவிக்கின்றன.
வாக்களிப்பு நிலையங்கள் மற்றும் வாக்கெண்ணும் நிலையங்களுக்கு விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 5 ஆயிரம் அதிரடிப்படையினர் அடங்கலாக 71100 பொலிஸார் தேர்தல் கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளதுடன் அவர்கள் எதிர்வரும் 6ஆம் திகதியிலிருந்து தமது கடமைகளை மேற்கொள்வார்கள்.
ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் தலா 3 பொலிஸார் வீதம் கடமையில் நிறுத்தப்படவுள்ளதுடன் அவசர சந்தர்ப்பங்களுக்கென சகல பொலிஸ் பிரிவுகளிலும் விசேட கலகமடக்கும் படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தலைமையகம் மேலும் குறிப்பிட்டுள்ளது(டி)



