திருமலை மாவட்டத்தின், தோப்பூர் செல்வநகர் நீனாகேணி பிரதேசத்தில் வசிக்கும் முஸ்லிம்களின் காணியில் அண்மைக் காலமாக ஏற்பட்டுவரும் பிரச்சினைகளுக்குத் தீர்வு கானும் வகையில் திருமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூப் தலைமையில் 2017.06.12 - திங்கட்கிழமை பி.ப. 3.00 மணியளவில் செல்வநகர் மஸ்ஜிதுல் ஹுதா பள்ளிவாசலில் விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில் திருமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஆர்.எம். அன்வர் மற்றும் லாஹிர் அகியோரும், திருமலை மாவட்ட அரசாங்க அதிபர் புஸ்பகுமார, முன்னால் பிரதேச சபை உறுப்பினர் நிஸ்மி, பள்ளிவாசல் நிர்வாகிகள் மற்றும் பிரதேச முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டார்.
இச்சந்திப்பில் கலந்துகொண்ட திருமலை மாவட்ட அரசாங்க அதிபர் குறித்த பிரதேசத்தில் வசிக்கும் எவரும் வெளியேற்றப்படமாட்டர்கள் என்றும், குறித்த 49 ஏக்கர் காணிக்குள் காணப்படும் 44 நிரந்தர வீடுகளுக்கு எவ்விதமான பிரச்சினைகளும் இல்லையென்றும் குறிப்பிட்ட 4 வகைகளின் கீழ் இக்காணியில் வசிப்பவர்களுக்கான அனுமதி பத்திரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். அதனடிப்படையில்...
01. புதைபொருள் பிரதேசம் மற்றும் நில அளவை மேற்கொள்ளல்.
02. 44 நிரந்திர வசிப்பாளர்களையும் எல்லைப்படுத்தல்.
03. பிரதேச செயலாளரால் அளவுகள் குறிக்கப்பட்ட கடிதம் வழங்கி வைக்கப்படும்.
04. உரியவர்களுக்கான காணி அனுமதிப்பத்திரம் வழங்கப்படும்.
இச்சந்திப்பில் கலந்துகொண்ட கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம். அன்வர் கருத்து தெரிவிக்கையில் காணி தொடர்பான இறுதித் தீர்மானம் எடுக்கும் அதிகாரம் மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் அப்பிரதேசத்திற்குப் பொறுப்பான பிரதேச செயலாளர் இருவருக்கும்தான் உள்ளது எனவும் இக்காணி விடயத்தில் சிலர் கூறும் பொய்யான கருத்தக்களை பிரதேச மக்கள் நம்ம வேண்டாம் எனவும் தெரிவித்தார்.