Latest News
    Post views-

    கிழக்கு மாகாண முதலமைச்சரின் அயராத முயற்சியின் பயனாக பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனங்கள்

    கிழக்கு மாகாண முதலமைச்சரின் அயராத முயற்சியின் பயனாக கிழக்கு மாகாணத்தில் 2017.06.14ஆந்திகதி (இன்று) பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டன. இந்த நிகழ்வு திருகோணமலை உவர்மலை விவேகானந்தா பாடசாலையின் விவேகானந்தா கலையரங்கத்தில் இடம்பெற்றது,

    இதன்போது சிங்களம், தமிழ் மற்றும் வரலாறு உள்ளிட்ட பாடங்களுக்கான ஆசிரியர்களுக்கான நியமனங்கள் இதன் போது கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டினால் வழங்கி வைக்கப்பட்டன,

    கிழக்கு மாகாண கல்வியமைச்சர் எஸ். தண்டாயுதபானி இந்த நிகழ்விற்கு தலைமை தாங்கினார். பட்டம் பெற்ற 259 பட்டதாரிகள் இதன் போது ஆசிரியர் நியமனங்களை பெற்றுக் கொண்டனர்,

    இதற்கு முன்னர் வழங்கப்பட்ட நியமனங்களின் போது போட்டிப் பரீட்சை மற்றும் நேர்முகப் பரீட்சையில் வரலாறு படத்தில் தோற்றி சித்தியடைந்தும் வெற்றிடங்கள் இன்மையால் நியமனங்கள் வழங்கப்படாதிருந்தவர்கள்,மற்றும் குறைந்த வெட்டுப்புள்ளிகளைப் பெற்றவர்கள் ஆகியோருக்கான வெட்டுப்புள்ளிகளைக் குறைத்து இந்த நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டன,

    கிழக்கு மாகாண முதலமைச்சர் பிரதமரிடம் மேற்கொண்ட தொடர்ச்சியான முயற்சியின் பயனாக கிழக்கில் 1700 பட்டதாரிகளை நியமிப்பதற்கான அனுமதி கிடைத்துள்ள நிலையில் அதன் முதற்கட்டமாக 259 பேருக்கான நியமனங்கள் வழங்கப்பட்டன,

    அத்துடன் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் கிழக்கு மாகாணத்தில் 890க்கும் மேற்பட்டோருக்கான நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..



    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்



    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    தற்போதைய பார்வைகள்

    Our twitter service

    online now


    உங்களுக்கும் இணையதளம்


    நேர்காணல்