திருகோணமலை மனையாவெளி பெரியக்கடை ஜும்மா பள்ளிவாசல் 03.06.2017-சனிக்கிழமை அதிகாலை 12.30 மணியளவில் இனந்தெரியாதோரினால் தாக்கப்பட்டுள்ளது.
ஐந்து மண்ணெண்ணெய் போத்தல்கள் அடங்கிய மண்ணெண்ணெய் வீச்சு தாக்குதல் இதன்போது இடம்பெற்றுள்ளதோடு, பள்ளிவாசலின் உள் பகுதியின் விரிப்புக்கள் மற்றும் உடைமைகள் என்பனவும் சேதமடைந்துள்ளன.
குறித்த பாதிக்கப்பட்ட பள்ளிவாயலுக்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம். அன்வர் விஜயம் மேற்கொண்டு பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டதுடன் பள்ளிவாசல் தலைவர் அலி உட்பட்ட நிர்வாக குழுவினரை சந்தித்து இதுவிடயமாக மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அரசாங்க அதிபர் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதாகவும் இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொள்வதாகவும் தெரிவித்தார்.
இதன் பொது அப்பிரதேசத்தை சேர்ந்த முன்னால் மாகாண சபை உறுப்பினர் பரசுராமணம் அவர்களும் சம்பவ இடத்திற்க்கு வருகை தந்திருந்தார்.