ஓட்டமாவடி கோறளைப்பற்று மேற்கு கல்விக்கோட்டத்திற்குட்பட்ட வாழைச்சேனை வை. அஹமட் வித்தியாலய மாணவர்கள் கடந்த காலங்களில் பாடசாலையில் குடிப்பதற்கு சுத்தமான நீர் இல்லாமையால் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வந்ததுடன், இதன் காரணமாக தங்களது தண்ணீர் தேவைக்காக குடிநீரினை வீடுகளிலிருந்து கொண்டு வர வேண்டிய நிலை காணப்பட்டது.
இதனை நிவர்த்திக்க பாடசாலையின் அதிபர் என்.எம். ஹஸ்ஸாலி எடுத்த அயராத முயற்சியின் காரணமாக தற்போது கல்குடாவில் தேசிய நீர் வழங்கள் வடிகாலமைப்புச் சபையால் வழங்கப்பட்டு வரும் குழாய் குடிநீர் விநியோகம் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக இதுவரை காலமும் மாணவர்கள் எதிர்நோக்கி வந்த சுத்தமான குடிநீருக்கான பிரச்சினை தீர்ந்துள்ளதுடன், இனிமேல் மாணவர்கள் வீடுகளிலிருந்து குடிநீரினை சுமந்து வர வேண்டியதில்லை. வாழைச்சேனை வை. அஹமட் வித்தியாலய மாணவர்களின் நன்மைகருதி அவரசமாக பாடசாலைக்கு குடிநீர் இணைப்பை வழங்கி உதவிய தேசிய நீர் வழங்கள் வடிகாலமைப்புச் சபைக்கும் அதனைப் பெறுவதில் ஒத்துழைத்த அனைவருக்கும் இந்த நேரத்தில் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வதாக பாடசாலையின் அதிபர் என்.எம். ஹஸ்ஸாலி தெரிவித்தார்.




