Post views-

வர்ணம் பூசும் தொழிலில் ஈடுபடும் நபருக்கு உதவிய பொறியியலாளர் ஷிப்லி பாறுக்

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக்கின் 2016ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டிலிருந்து துவிச்சக்கர மற்றும் மோட்டார் வண்டிகளுக்கு வர்ணம் பூசும் தொழிலில் ஈடுபடும் நபர் ஒருவருக்கு அவரது சுய தொழிலினை மேம்படுத்தும் நோக்கில்  வர்ணம் பூசும் இயந்திரம்  (Air Compressor) ஒன்று வழங்கி வைக்கப்பட்டது.

தன்னுடைய சுய தொழிலினை மேம்படுத்துவதற்காக வர்ணம் பூசும் இயந்திரம் ஒன்றினை தனக்கு பெற்றுத்தருமாறு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக்கிடம் குறித்த நபர் வேண்டுகோள் ஒன்றினை முன்வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

அதற்கமைவாக தனது 2016ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டிலிருந்து இவ்வியந்திரத்தினை பெற்று குறித்த துவிச்சக்கர மற்றும் மோட்டார் வண்டிகளுக்கான வர்ணம் பூசும் தொழிலாளியின்வீ வீட்டிற்கு 2017.05.20ஆந்திகதி-சனிக்கிழமை நேரடியாகச் சென்று கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் கையளித்தார்.


  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..



    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்



    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    தற்போதைய பார்வைகள்

    Our twitter service

    online now


    உங்களுக்கும் இணையதளம்