Post views-

மட்டு. போதனா வைத்தியசாலையில் இரத்தப்பற்றாக்குறை

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் இரத்தப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் பொது அமைப்புக்கள் உடன் இரத்த தான முகாம்களை நடாத்துமாறு வைத்தியசாலைப் பணிப்பாளர் Dr. MS. இப்றா லெப்பை வேண்டுகோள் விடுத்துள்ளார். 

கடந்த சில தினங்களில் மாவட்டத்தில் ஏற்பட்ட டெங்கு மற்றும் வைரஸ் நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிகளவு இரத்தம் பாய்ச்ச வேண்டிய தேவையேற்பட்டதால் இரத்த வங்கியிலிருந்து பெறப்பட்டு நோயாளிகளுக்கு வழங்கப்பட்டு வந்தது. இதன் காரணமாக நாம் தற்போது பாரிய இரத்த தட்டுப்பாட்டை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கி எதிர்நோக்கியுள்ளது. 


ஆகவே, மாவட்டத்திலுள்ள தொண்டு நிறுவனங்கள், இளைஞர் அமைப்புக்கள், விளையாட்டுக்கழகங்கள் உடனடியாக இரத்த தான முகாம்களை நடாத்தி இரத்த வங்கியில் ஏற்பட்டுள்ள இரத்த தட்டுப்பட்டை நிவர்த்தி செய்து எமது மாவட்ட மக்களுக்கு உதவ முன்வருமாறு வேண்டுகோள் விடுப்பதாக வைத்தியசாலைப் பணிப்பாளர் Dr. MS. இப்றா லெப்பை தெரிவித்தார்.


  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..



    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்



    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    தற்போதைய பார்வைகள்

    Our twitter service

    online now


    உங்களுக்கும் இணையதளம்