(24.05.2017-புதன்கிழமை கொழும்பில் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் ஏற்பாட்டில் “இஸ்லாமிய தமிழ் இலக்கிய பொன் விழா பற்றிய நினைவு மலா் முஸ்லீம் காங்கிரசின் “சாட்சியம்” எனும் மாதாந்த இதழ் மற்றும் www.slmc.lk வெப்தளமும் வெளியீட்டு வைக்கப்பட்டது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக முஸ்லீம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவுப் ஹக்கீம் கலந்து கொண்டாா். நுாலின் முதற்பிறதி மருதமுனை ஹசன் மொளலானாவிடம் வழங்கி அமைச்சா் ஹக்கீமினால் வெளியீட்டு வைக்கப்பட்டது.
இந்வெளியீடுகள் பற்றி பேராசிரயா் எம்.எஸ்.எம். அனஸ், பேராசிரியா் ரமீஸ் அப்துல்லாஹ், கவிஞா் ரவூப் ஹசீா், காதா் ஆகியோரும் உரையாற்றினாா்கள். இந்நிகழ்வில் கட்சி அங்கத்தவா்கள், அமைச்சா்கள், பாராளுமன்ற மாகாண சபை உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்தனா்.







