அலப்போ அழுகை ஓயவில்லை . சாய்ந்த ஷஹீதுகளின் தொகை எண்ணப்படவில்லை . கட்டட இடிபாடுகளுக்கிடையே சிக்கிக்கொண்டுள்ள ஜனாஸாக்கள் எத்தனை நாட்களுக்கு அங்கே அகப்பட்டிருக்கும் என்பது அல்லாஹ்வுக்கு மட்டுமே தெரியும் .
சொந்த தாயை ,தகப்பனை, புதல்வனை, புதல்வியை, சகோதரனை , சகோதரியை கணவனை ,மனைவியை இழந்த ஆயிரக்கணக்கான சகோதரங்களின் ஒப்பாறி இன்னமும் ஓயவில்லை
அலோப்பே விதைத்த காயங்கள் வரலாற்றில் கண்ணீர் எழுத்துக்களால் காயமாக எழுதப்படும் .
ஐநாவின் கையால் ஆகாத தனத்தையும் மேற்கு நாடுகளின் இரட்டை நிலைப்பாட்டையும் அரபு ,முஸ்லிம் நாடுகளின் தேசிய வாத, சுயநலப் போக்கையும் அலப்போ உலகத்துக்கு பறைசாற்றி நிற்கின்றது.
பெருந்தொகை பணத்தை விரயமாக்கி பெரும் ஆயுத இருப்புக்களை வாங்கி வைத்துக்கொண்டு சகோதரன் அழுகிற போது அவனுக்கு பயன்படுத்தா அரபு நாடுகள் மற்றும் துருக்கி பொறுமைக்கும் விவேகத்துக்கும் புதிய வரைவிலக்கணக்ம் வழங்க முடியும் .
மீசையை முறுக்கிய கோழை ப்பயல்கள் என்று அவர்களை அழைப்பதை விட வேறு வார்த்தைகள் கிடைக்கவில்லை .
அலப்போ ஓலம் ஒயவில்லை . அந்த அழுகை ஓய்வதற்குள்ளேயே இன்னொரு அலப்போ உருவாகிற அச்சம் நமக்கு அருகிலேயே சுற்றி நிற்கிறது .
சிரிய காட்டுமிராண்டி இராணுவத்தால் சுற்றி வளைத்து முற்றுகை இடப்பட்டுள்ள 40 நகரங்களில் அலப்போ ஒன்று மட்டும் தான் . இன்னும் 39 பகுதிகளின் ஓலம் கேட்பதற்கு இன்னும் வெகு நாட்கள் ஆகப்போவதில்லை .
சிரிய படைகளின் அடுத்த இலக்கு இத்லிப் பகுதியே . போராளிகளின் பகுதிகளில் இருந்து வருகிற ஓலம் உலகை நனைக்கிறது .ஐ எஸ் அமைப்பின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் அப்பாவி பொதுமக்கள் மீது அமெரிக்கவும் ரஷ்யாவும் ,சிரிய ஈராக்கிய இராணுவங்களும் கேட்பதற்கு யாரும் இல்லை என்கிற ரீதியில் நடத்தி வரும் மிலேச்சத்தனமான தாக்குதல்கள் பிரதான சர்வதேச மீடியாக்களில் வருவதில்லை; உலகத்துக்கு அறிவிக்கப்படுவதும் இல்லை .
சர்வதேச அரங்கில் மாறி வருகிற நிலை முஸ்லிம்களுக்கு சாதகமானதாக இல்லை என்பதை ஒவ்வொரு முஸ்லிம்,அரபு நாடுகளும் உணர்ந்து கொள்ள வேண்டும் . புதிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முஸ்லிம்களுக்கு எதிரான போக்குள்ளவர் மாத்திரமல்ல ரஷ்ய சார்புடையவர் .
முன்னர் ரஷ்யாவுக்கு எதிராக என்று வருகின்ற போது வரிந்து கட்டிக்கொண்டு வந்த அமெரிக்காவை இனி அரபு நாடுகள் எதிர்பார்க்க முடியாத சூழ்நிலை உருவாகி உள்ளது .
ஐநா விலும் மேற்கு நாடுகளிலும் தங்கி இருக்கின்ற நிலையை அரபு முஸ்லிம் நாடுகள் மாற்ற வேண்டும் . பல் பிடுங்கப்பட்ட அரபு லீக்காலும் கிழம் தட்டி விட்ட ஒ ஐ சி யாலும் இதுவரை ஏதுவுமே ஆகியதில்லை ;இனியும் ஆகப்போவதில்லை . அரசியலை ஒரு புறம் ஒதுக்கி வைத்து விட்டு இராணுவ ரீதியான ஒன்று பட்ட அமைப்பு ஒன்றை முஸ்லிம் நாடுகள் உருவாக்க வேண்டும் .
ஒவ்வொரு முஸ்லீம்களும் தமக்கிடையே இருக்கின்ற பிரச்சினைகளை வேறுபாடுகளை களைய வேண்டும் அல்லாஹ்வுக்காக ஒன்று பட வேண்டும் . இதை நம் ஒவ்வொருவர் குடும்ப மட்டத்தில் இருந்து ஆரம்பிக்க வேண்டும் . பின்னர் சமுகம் ஊர் நாடு என்கிற ரீதியில் ஒற்றுமையை ஏற்படுத்த முயல வேண்டும் .
நமது குடும்பத்தில் பிரிவினையை வைத்துக்கொண்டு அரபு நாடுகளின் ஒற்றுமை அற்ற தன்மையை பேசுவது எந்த வகையில் நியாயம் ? சர்வதேச அரங்கிலே இரண்டு ஷைத்தான்கள் ஒன்று நிலையில்
சேர்த்துள்ள நிலையில் இனிவரும் காலங்கள் கடுமையானதாக இருக்கும்.எனவே நமக்குள் இருக்கிற ஷைத்தான்களை உதறி எரிய வேண்டிய நிலைக்கு ஒவ்வொரு முஸ்லீமக்ளும் தள்ளப்பட்டுள்ளோம்.
நமக்குள் உள்ள ஈகோ ,ஜமாத்து வாதம் ,கருத்து வாதம் பிரதேச வாதம் ,தேசியவாதம் ஆகியவற்றை தூக்கி எரிந்து ஒன்று படும் வரை அலப்போ அழுகுரல் உலகின் எங்கேயோ ஒரு மூலையில கேட்டுக்கொண்டே தான் இருக்கும் . அந்த அழுகுரல்களுக்கு நாம் ஒவ்வொருவரும் காரணமாக இருந்து கொண்டேதான் இருப்போம்




