தற்பொழுது நடைபெற்று வரும் க.பொ.த. சா.தரப் பரீட்சைக்குத் தோற்றிக் கொண்டிருக்கும் மட்டக்குழியைச் சோந்த 10க்கும் மேற்பட்ட முஸ்லீம் மாணவிகள் வெளிவாரியாக பரீட்சைக்குத் தோற்றுகின்றனா். ஆனால் இதுவரை 5 நாட்களாக நடைபெற்ற பரீட்சையின்போது மண்டபத்திற்குள் தங்களது தலையில் அணியும் பர்தாவை கழற்றி மேசையில் வைத்து விட்டே பரீட்சை எழுதி வருவதாக துணிந்து ஒரு மாணவி ஊடகங்களுக்கு தெரிவித்தாா்.
பரீட்சை நிலையத்தின் கடமையுள்ள பிரதான பரிசோதகரே இதனைக் கண்டிப்பாக நடைமுறைப்படுத்தினாா். கொழும்பு -15 டி லசலி ஆண்கள் கல்லுாாியிலேயே பரீட்சைக்கு தோற்றும் சகல முஸ்லீம் மாணவிகளுக்கும் இவ்வாறு தலையை மறைக்கும் சீலையை கழற்றிவைத்து விட்டே நாங்கள் 6 பாடங்களை இதுவரை எழுதி வருவதாக அம் மாணவி தெரிவித்தாா்.
இப் பரீட்சையில் ஆன்கள், பெண்கள் கலந்தே பரீட்சைக்குத் தோற்றி வருகின்றேன். இவ்விடயம் சம்பந்தமாக அமைச்சா் பைசா் முஸ்தபா கவனத்திற்கு கொண்டு வந்ததையிட்டு அவா் சம்பந்தப்பட்ட பரீட்சை ஆணையாளா், கல்வியமைச்சா் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு வந்தாகவும் ஏற்கனவே கல்வியமைச்சா் இதனை அறிவித்து கல்வியமைச்சோ பரீட்சைத் திணைக்களமோ தமது பரீட்சை பரிசோதகா்களுக்கு சுற்றறிக்கை மூலம் தெரிவிக்க வில்லை.
இப்பிரச்சினைகள் ஒரு சில இடங்களிலேயே நடைபெற்றுள்ளது. பர்தாவுக்குள் பிரதிகளை வைத்துக் கொண்டு பாா்த்து எழுதலாம் என்ற ரீதியில் பரிசோதகா் இதனைக் கருதுகின்றனா்.




