Post views-

ஹம்பாந்தோட்டை துறைமுக ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு இன்று முன்னெடுப்பு


ஹம்பாந்தோட்டை துறைமுக ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு இன்று முன்னெடுப்பு

ஹம்பாந்தோட்டை துறைமுக ஊழியர்கள் ஒன்பதாவது நாளாக இன்றும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
தங்களின் போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுப்பதா? இல்லையா? என்பது தொடர்பில் இன்று நண்பகல் 12 மணிக்கு முன்னர் தீர்மானிக்கவுள்ளதாக துறைமுக ஊழியர் குழுவின் தலைவர் ஐ.கே. ஒமேஷ் குறிப்பிட்டார்.
விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் அர்ஜுண ரணதுங்கவுடன் நேற்று பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், இதன்போது அமைச்சர் தனது நிலைப்பாட்டை அறிவித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அமைச்சரின் நிலைப்பாடு தொடர்பில் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுடன் கலந்துரையாடிய பின்னர் தமது போராட்டம் குறித்து தீர்மானமொன்றை எடுக்கவுள்ளதாக துறைமுக ஊழியர் குழுவின் தலைவர் கூறினார்.
எவ்வாறாயினும், ஹம்பாந்தோட்டை துறைமுக நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடாதென ஹம்பாந்தோட்டை பிரதம நீதவான் மஞ்சுல கருணாரத்ன ஏழு நிபந்தனைகளுடனான உத்தரவொன்றை நேற்று பிறப்பித்திருந்தார்.
இந்த நிபந்தனைகளின் பிரகாரம் சட்ட ரீதியாக துறைமுகத்தினுள் பிரவேசிக்கும் பிரதான நுழைவாயிலுக்கு தடை ஏற்படுத்த முடியாது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
துறைமுகத்தினுள் பிரவேசிக்கும் கப்பல்களுக்கு அல்லது படகுகளுக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது என்பதுடன், துறைமுகத்தின் எந்தவொரு உடைமைக்கும் சேதம் விளைவிக்கக் கூடாது என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..



    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்



    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    தற்போதைய பார்வைகள்

    Our twitter service

    online now


    உங்களுக்கும் இணையதளம்