மருதமுனையைச் சேர்ந்த சிரேஷ்ட எழுத்தாளர் ஏ.ஆர்.அப்துல் ஹமீட் இவ்வருடத்திற்கான (2016)கலாபூஷண விருது பெறுகின்றார் இவருக்காண விருது எதிர்வரும் 2016-12-23ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ள விழாவில் வழங்கப்படவுள்ளது.
இவர் 1955.04.21ஆம் திகதி மருதமுனையில்
பிறந்தார்.மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரி,மருதமுனை அல்மனார் மத்திய கல்லூரி,கல்முனை ஸாஹிறா கல்லூரி,மட்டக்களப்பு சிவானந்தா கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவராவார்.
இவர் தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தில் தொழில் வாண் உளவள துறை டிப்ளோமா கற்கை நெறியை பூர்த்தி செய்து பட்டத்தைப் பெற்றுள்ளார்.இலக்கியத் துறையில் ‘மாமி இல்லாத பூமி’என்ற சிறுகதைகளின் தொகுப்பு நூல் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.மேலும் பல கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.தனது இலக்கியப் பயணத்திற்கு மருதூர் கொத்தன் வீ.எம்.இஸ்மாயில் வழிகாட்டியா இருந்ததாக அவரை நினைவு கூறுகின்றார்
இவர் தற்பொழுது பகுதி நேர ஆங்கில ஆசிரியராக வெளிவாரி வகுப்புக்களை நடாத்திவருகின்றார்.இவர் மருதமுனையைச் சேர்ந்த அலியார் அப்துற் றகுமான் மரைக்கார்,கலந்தர் ஆசறாஉம்மா தம்பதியின் புதல்வராவார்.
PMMA காதர்
PMMA காதர்