வசந்தம் எப்.எம். அறிவிப்பாளா் ஏ.எம். அஸ்கர் எழுதிய 'இந்த காலைப் பொழுது' கவிதை நூல் வெளியீடு விழா தபால் தலைமையக கேட்போர் கூடத்தில் இன்று (17) சட்டத்தரணி ராஜகுலேந்திரா தலைமையில் நடைபெற்றபோது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
இந்நிகழ்வில் கௌரவ அதிதியாக அமைச்சர் மனோ கணேசன், உலக அறிவிப்பாளா் பி.எச். அப்துல் ஹமீத், இந்திய கவிஞா் சினிமா பாடல் இயற்றும் யுகபாரதி, இந்தியா சினிமா தயாரிப்பாளா் மீரா கதிரவன், கவிஞா் திருமதி அனாா், திரைப்பட இயக்குனா் ஹஸீன், வசந்தம் தொலைக்காட்சி முகாமையாளா் முருகேசு குலேந்திரன் மற்றும் எழுத்தாளா்கள். ஊடகவியலாளா்கள் என பலரும் கலந்து கொண்டனா்.