(எம்.ஜே.எம் சஜீத்)
உலமாக்கள் மற்றும் இஸ்லாமிய அமைப்புக்கள் அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா சபையின் வழிகாட்டல்களின்கீழ் ஒன்றினைந்து செயற்படுவது காலத்தின் தேவையாகும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ் சுபையிர்தெரிவித்தார்.
பைசானுல் மஸீன் அரபுக் கல்லூரியின் முப்பெரும் விழா கல்லூரியின் பணிப்பாளர் ஐ. அப்துர் ரஹீம் தலைமையில்கல்லூரியின் கேட்போர் கூடத்தில் (18) நடைபெற்றது. இந்நிகழ்வில் அதிதிகளில் ஒருவராகக் கலந்துகொண்டுஉரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில் பைசானுல் மஸீன் அரபுக் கல்லூரியானது சுமார் 16 வருடங்களாகஇப்பிராந்தியத்தில் சிறந்த முறையில் இயங்கி வருகின்றது. கடந்த 9வருடங்களாக இக்கல்லூரியானது சிறந்தஉலமாக்களை வெளியாக்குகின்ற ஒரு கலாசாலையாகவும் திகழ்ந்துகொண்டிருக்கிறது.
இக்கலாசாலையானது நாட்டின் நாலாபாகங்களிலிருந்தும் மாணவர்களை இணைத்துக் கொண்டு ஹாபிழ்களையும்வெளியேற்றுகின்ற பணியை தொடர்ச்சியாக செய்துவருகின்றது. இக்கலாசாhலையின் பணி மேலும் சிறக்க இந்தமண்ணின் மக்கள் பிரதிநிதி என்ற வகையில் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
குறிப்பாக இக்கலாசாலையிலிருந்து வெளியேறுகின்ற உலமாக்கள் ஆத்மீகக் கல்வியைக் கற்பது போன்றுஉலகக்கல்வியினையும் கற்று இந்த நாட்டில் சிறந்த உலமாக்களாக திகழ வேண்டும். அப்போதுதான் சமகாலத்தில் நாம்எதிர்நோக்குகின்ற சவால்களை வெற்றிகொள்ள முடியும். குறிப்பாக உலமாக்கள், இஸ்லாமிய அமைப்புக்கள் அகிலஇலங்கை ஜம்மிய்யத்துல் உலமாக சபைக்கு கட்டுப்பட்டு ஒரு தலைமைத்துவத்தின் கீழ் செயற்படவேண்டும்.
இன்று எமது நாட்டிலுள்ள உலமாக்கள் மற்றும் இஸ்லாமிய அமைப்புக்கள் மார்க்க விடயங்களுக்காக தங்களுக்குள்ளேமுரண்பட்டுக் கொண்டு நீதி வேண்டி நீதிமன்றங்களுக்குச் செல்லகின்ற கசப்பான சம்பவங்களை அண்மைக்காலமாகஊடகங்கள் வாயிலாக பார்க்கின்ற போது மிகவும் கவலையாகவுள்ளது. இவ்வாறு முஸ்லிம் சமூகத்திற்குள்ளே இடம்பெறுகின்ற மோதல்களைப் பார்த்து அந்நிய சமூகம் கைதட்டி சிரிக்கின்ற நிலைமையினையும் பார்க்ககூடியதாகவுள்ளது.
எனவே இவ்வாறான சூழ்நிலையில் இஸ்லாமிய அமைப்புக்கள், உலமாக்கள் அகில இலங்கை ஜம்மிய்யத்துல் உலமாசபையினுடைய தலைமைத்துவத்தினை ஏற்றுக் கொண்டு உலமா சபையினுடைய ஆலோசனைகளையும்அறிவுரைகளையும் பெற்று எமது சமூகத்தை வழிநடாத்த வேண்டும். இன்று சில அமைப்புக்கள் உலமா சபையினைவிமர்சிப்பதும் அதனுடைய நிருவாகத்திற்கு எதிராகச் சமூக வலையதளங்களில்; அறிக்கையினை விடுவதனையும்காணக்கூடியதாகவுள்ளது.
எமது நாட்டில் தற்போதைய சூழ்நிலையில் உலமாக்கள் குழுக்களாக பிரிந்துகொண்டும் விமர்சித்துக்கொண்டும் முட்டிமோதிக்கொள்கின்ற சம்பவங்களை முஸ்லிம் சமூகம் ஒருபோதும் விரும்பவில்லை என்பதனை அனைவரும்புரிந்துகொள்ள வேண்டும்.
குறிப்பாக பௌத்த சமயத்திலுள்ள சில பிரிவினாக்கள் பிரிந்து பல நிக்காயங்களாக செயற்படுவதனாலேஅவர்களுக்குள்ளே அவர்களை கட்டுப்படுத்த முடியாத சூழ்நிலை எற்பட்டுள்ளது. இதனாலே இந்த நாட்டில் இனவாதசெயற்பாடுகள் மேலோங்கி காணப்படுகின்றது.
இன்று முஸ்லிம்களுக்கு எதிராகவும் இஸ்லாம் சமயத்திற்கு எதிராகவும் இனவாத குழுக்கள் செயற்படத்தொடங்கியுள்ளது. அண்மைக்காலமாக எமது பள்ளிவாசல்களும் தாக்குதலுக்குள்ளாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில்நாம் அனைவரும் ஒற்றுமைப்படுவது காலத்தின் தேவையாகும்.
எனவே, முஸ்லிம் அமைப்புக்கள், உலமாக்கள் எல்லா நிலையிலும் ஒரு தலைமைத்துவத்தின் கீழ் ஒற்றுமையாகசெயற்பட வேண்டும் மாறாக பிரச்சினைகள் வருகின்ற போது அகில இலங்கை ஜம்மிய்யத்துல் உலமா சபையைசாடுவதனையும் அதன்; நிருவாகத்தினை சமூக வலையதளங்களில் தூற்றுவதனையும் அனைவரும் நிறுத்திக் கொள்ளவேண்டும்.
எமது சமூகம் எதிர்நோக்குகின்ற சவாலை தகத்தெரிவதற்கு அனைவரும் ஜம்மிய்யத்துல் உலமா சபையின் கீழ்ஒன்றுபட்டு செயற்பட வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.