(எம்.ஜே.எம்.சஜீத்)
4ஆவது இளைஞர் பாராளுமன்றத்திற்கான தேர்தல் எதிர்வரும் 18ஆம் திகதி நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் வாக்களிக்க தகுதியுள்ள இளைஞர் கழக உறுப்பினர்களுக்கான வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
அட்டாளைச்சேனை பிரதேசத்திலுள்ள இளைஞர் கழகங்களின் உறுப்பினர்களுக்கு இன்று முதல் வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்பட்டு வருகிறது. அட்டாளைச்சேனை இக்றஃ இளைஞர் கழக உறுப்பினர்களுக்கான வாக்காளர் அட்டைகள் வழங்கும் நிகழ்வு இன்று (15) இடம்பெற்றது.
அட்டாளைச்சேனை பிரதேச செயலக இளைஞர் சேவை உத்தியோகத்தர் எம்.ரீ.எம் ஹாறூன் இக்றஃ இளைஞர் கழகத்தின் செயலாளரிடம் அக்கழகத்தின் உறுப்பினர்களுக்கான வாக்காளர் அட்டைகளை வழங்கி வைத்தார். இந்நிகழ்வில் முன்னாள் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினரும், அட்டாளைச்சேனை இளைஞர் சம்மேளன தலைவருமான யூ.எல் சபீரும் கலந்துகொண்டார்.
 

 




 
