Post views-

உள்ளுராட்சி சபைகளை பலப்படுத்துவதன் ஊடாக ஏழை மக்களின் உயர்வுக்கு பாரிய பங்கினை வழங்க முடியும்

(எம்.ஜே.எம்.சஜீத்)

கிழக்கு மாகாண சபை அமர்வு நேற்று (20) தவிசாளர் சந்திரதாச கலபெதி தலைமையில் நடைபெற்ற போது 2017ஆம் ஆண்டிக்கான வரவு செலவு திட்டத்தில் கிழக்கு மாகாண உள்ளுராட்சி அமைச்சுக்கான நிதியொதுக்கீடு விவாதத்தின் போது உரையாற்றுகையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில் உள்ளுராட்சி திணைக்களம் மிக முக்கியமான துறையாகும். 13வது திருத்தச்சட்டத்தில் வழங்கப்பட்ட அதிகாரத்தில் மிகக் கூடுதலான அதிகாரங்கள் உள்ளுராட்சி சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. அடிமட்டத்தில் வாழும் ஏழை மக்களின் வாழ்வுக்கு இத்திணைக்களம் பாரிய பங்கினை வழங்கி வருகின்றது. கிழக்கு மாகாண உள்ளுராட்சி மாகாண ஆணையாளர் சலீம் அவர்களின் மேற்பார்வையில் கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ள உள்ளுராட்சி சபைகளின் நிர்வாகம் சிறப்பாக நடைபெற்று வருகின்றது.

கடந்த அரசாங்கத்தில் கிழக்கு மாகாணத்தில் அண்மையில் உள்ளுராட்சி சபைகளின்; அபிவிருத்திற்கு முக்கிய பங்களிப்புக்கள் வழங்கப்பட்டன. முன்னாள் உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம் அதாஉல்லா அவர்களின் முயற்சியினால் கிழக்கு மாகாணத்தில் உள்ளுராட்சி சபைகளுக்கு நிதிகள், நவீன கட்டிடங்கள், வாகனங்கள், கனரக இயந்திரங்கள் என்பன வழங்கப்பட்டதுடன் விசேட திட்டங்களும் அமுல்படுத்தப்பட்டு உள்ளுராட்சி சபைகளுக்கு உயிர் ஊட்டப்பட்டன.

கிழக்கு மாகாண உள்ளுராட்சி சபைகளில் கிழக்கு மாகாண ஆளும்கட்சி உறுப்பினர்களின் சிபாரிசின் பெயரில் சுமார் 500க்கு மேற்பட்ட சுகாதார தொழிலார்கள் நியமனம் வழங்கப்பட்டன. இவ்வாறு நியமனம் செய்யப்பட்ட சுகாதார தொழிலாளர்களுக்கு சில உள்ளுராட்சி சபைகளில் 5000 ரூபாவும், சில உள்ளுராட்சி சபைகளில் 10000 ரூபாவும் கொடுப்பனவாக வழங்கப்படுகின்றது. இக் கொடுப்பணவானது உள்ளுராட்சி சபைகளின் வருமானத்திலிருந்தே வழங்கப்படுகிறது.

மேற்குறித்த சுகாதார தொழிலாளர்கள் போதிய சம்பளம் கிடைக்காமையினால் தங்களுக்கு வழங்கப்பட்ட சுகாதாரத் தொழிலில் ஈடுபடுவதற்குப் பதிலாக காரியாலயங்களில் இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால் உள்ளுராட்சி மன்றங்களும், குறித்த சுகாதாரத் தொழிலாளர்களும் பல அசௌகரியங்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது. எனவே அரசியல் நோக்கத்தின் அடிப்படையில் பிழையான வழியில் நியமனங்களை வழங்கி இளைஞர்களின் எதிர்காலத்தை சீரழிக்காமல் இவர்களுக்கான நிரந்தர நியமனங்களை பெற்றுக் கொடுப்பதற்கு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

குறிப்பாக சில உள்ளுராட்சி சபைகள் போதிய வருமானமின்றி தங்களது சபையினை வழிநடத்திக் கொண்டிருக்கும் இக்கால கட்டத்தில் இச்சுகாதார தொழிலாளர்களுக்கான கொடுப்பணவுகளை வழங்குவதிலும் சிக்கித்தவிக்கின்றன. அதன் காரணமாக மேற்குறித்த தொழிலாளர்களைக் கொண்டு நாம் எதிர்பார்த்த இலக்கை அடையமுடியாது. ஆகவே இவ்வாறு நியமனம் செய்யப்பட்டுள்ள இளைஞர்களின் எதிர்கால நலன்கருதி அவர்களுக்கு சுகாதாரத் தொழிலாளர் நிரந்த நியமனம் வழங்கப்பட வேண்டும்.

அப்போதுதான் அவர்களின் ஊடாக நாம் எதிர்பார்த்த சிறந்த சேவையினைப் பெற்றுக் கொள்ளமுடியும். இல்லையெனில் அவர்கள் உள்ளுராட்சி சபைகளிலே சும்மா அமர்ந்து கொண்டு காலம் கடத்த வேண்டியேற்படும். எனவே, அதிகௌரவ ஜனாதிபதி, கௌரவ பிரதமர் ஆகியோரை தொடர்பு கொண்டு இவர்களுக்கான நிரந்தர நியமனங்களை வழங்குவதன் ஊடாக பிரதேசங்களில் ஏற்படுகின்ற சுகாதார சீர்கேடுகளை தடுக்க முடியும்.

பொத்துவில் பிரதேச சபைக்கு சகல வசதிகளையும் கொண்ட கட்டடம் ஒன்று இல்லாத சூழ்நிலையில் ஒரு சிறிய கட்டிடத்தில் பொத்துவில் மக்கள் குடியிருப்பு உட்பிரதேசத்திற்குள் அப்பிரதேச சபை இயங்கி வந்தது. இந்நிலையில் உள்ளுராட்சி மாகாண சபைகள் முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லா அவர்களிடம் நான் வேண்டுகோள் விடுத்ததற்கிணங்க பொத்துவில் பிரதான வீதிற்கு அருகில் சகல வசதிகளையும் கொண்ட நவீன பிரதேச சபை கட்டிடம் ஒன்று அமைக்கப்பட்டு அப்பிரதேச சபைக்கு வாகனங்கள், கனரக இயந்திரங்கள், கழிவகற்றும் வாகனம் என்பனவும் வழங்கப்பட்டன.

இவ்வாகனங்களை வழங்கி இரண்டு வருடங்களாகியும் தற்போது கழிவகற்றும் வாகனம் பயன்படுத்த முடியாத சூழ்நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றது. பல கோடி ரூபா பெருமதியான கழிவகற்றும் இயந்திரத்தினைப் பெற்றுக் கொடுத்தும் பொத்துவில்  பிரதேச சபைகளில் இது தொடர்பான ஊழியர்கள் இல்லை என தெரிவிக்கின்றனர். இதனால் எந்தப்பலனையும் அந்த மக்கள் பெற்றுக்கொள்ளவில்லை.

பொத்துவில் பிரதேசத்தில் கழிவகற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாமையில் இப்பிரதேசம் சுகாதார பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றன. குறிப்பாக பொத்துவில் பிரதேச வைத்தியசாலைக்கு கூட இந்த கழிவகற்றும் கனரக வாகனத்தை வழங்க முடியாத சூழ்நிலை பொத்துவில் பிரதேச சபைக்கு ஏற்பட்டுள்ளது. எனவே இது தொடர்பில் அவசர ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..



    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்



    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    தற்போதைய பார்வைகள்

    Our twitter service

    online now


    உங்களுக்கும் இணையதளம்