Post views-

ரஸ்ய தூதுவர் சுடப்படும் வீடியோ வெளியாகியுள்ளது

துருக்கியிலுள்ள ரஷ்ய தூதுவர் அன்தோயி கர்லோவி மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. துருக்கியின் அங்கார நகரில் வைத்தே இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

புகைப்பட கண்காட்சியொன்றிற்கு சென்றிருந்த சந்தர்ப்பத்திலேயே இந்த துப்பாக்கி பிரயோகம் நடாத்தப்பட்டுள்ளது. துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்கான அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.

இதேவேளை, இந்த துப்பாக்கி பிரயோகத்தில் மேலும் பலர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..



    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்



    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    தற்போதைய பார்வைகள்

    Our twitter service

    online now


    உங்களுக்கும் இணையதளம்