“நடந்து முடிந்த, கல்விப் பொதுத் தராதர சாதாரணத்தரப் பரீட்சை வினாத்தாள்களை மதிப்பீடு செய்யும் நடவடிக்கைகள், ஜனவரி மாதம் 3ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்படும்” என்று, பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்த மதிப்பிடும் பணிகள், இரண்டு கட்டங்களாக முன்னெடுப்படும் என்றும் அத்திணைக்களம் அறிவித்துள்ளது. அதன் பிரகாரம் முதலாவது கட்டம், ஜனவரி மாதம் 3ஆம் திகதிமுதல் 12ஆம் திகதி வரையிலும் இரண்டாம் கட்டம் ஜனவரி மாதம் 21ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரையிலும் இடம்பெறும் என்றும் அத்திணைக்களம் அறிவித்துள்ளது.




