Post views-

இலங்கையில் பரவும் லிஷ்ம நைஸ் நோய்! 30 பேர் பலி! எச்சரிக்கை

இலங்கையில் பரவி வருகின்ற புதிய நோய் குறித்து அதிர்ச்சியான பல தகவல்கள் வெளிவந்துள்ளன.
அதாவது  2010 ஆம் ஆண்டு தொடக்கம் 2016 ஆம் ஆண்டு வரை அனுராதபுர மாவட்டத்தில் அதிகமான மக்கள் லிஷ்ம நைஸ் எனும்தோல் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடமத்திய மாகாண சுகாதார சேவை அதிகாரி ஹேமோ வீரகோன் இதனை தெரிவித்துள்ளார்
1992 ஆம் ஆண்டு இலங்கையில் முதல் தடவையாக இந்த லிஷ்ம நைஸ்நோய் வட மாகாணத்தில் ஹம்பலான்தொட பிரதேசத்தில் தொற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
எனினும் இது குறித்த மக்கள் அறிந்து சிகிச்சை பெற்று கொள்வதில்லை என மருத்துவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறித்த தோல் நோய் 98 நாடுகளில் பரவியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதனால் உலக முழுவதும் 14 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் பாதிப்படைந்துள்ளதாக பதிவாகியுள்ளது
இதனால் வருடத்திற்கு உலக முழுவதும் 30 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள்
உயிரிழப்பதாக உலக சுகாதார அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.

இவ்வாறான தோல் நோய்கள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அனுகி சிகிச்சை பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
149779_1
  • இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..



    உங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பதிவு செய்யுங்கள்



    நேரடி கிரிக்கட் ஸ்கோர் அறிய

    தற்போதைய பார்வைகள்

    Our twitter service

    online now


    உங்களுக்கும் இணையதளம்